திங்கள், 1 டிசம்பர், 2008
யாப்பின் தோற்றம்
கவிதை மொழி தோன்றிய காலத்தை நம்மால் அறுதியிட முடியாது.மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் வாழ்வில் இரண்டறப் பின்னிப் பிணைந்து கிடப்பது கவிதை மொழியாகிய பாட்டு.தாலாட்டாகட்டும்,தொழிற்பாட்டுகளாகட்டும்,ஒப்பாரி பாடல்களாகட்டும் எல்லா பாடல்களுமே ஒரு வித ஓசை நயமும்,இசை ஓழுங்கும்,தாளக்கட்டும்,சுருதிலயமும்,சங்கித உயிர்ப்பும் இருப்பதைக் காணலாம்.இவ்வகை ஒழுங்கை தான் இலக்கண நூலார் யாப்பு என்ற கலைச்சொல்லாகக் கூறிக்கின்றனர்.உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது யாப்பு.யாப்பினை மரபு கவிதை இயற்றுவோர் மட்டும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை,புதுக்கவிதை இயற்ற விரும்புவோரும் அறிந்து கொள்வது நலம்.-------தொடரும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
கவிதைபாடக் கற்றுக் கொடுக்க விழைந்திருக்கும் முனைவர் கல்பனா அவர்களே!! தங்களுக்கென் முதன்மை வணக்கங்கள். தங்களது இவ்வலையை எனது வெண்பா எழுதலாம் வாங்க வலையோடு இணைத்துக் கொள்ள (அதாவது இவ்வலையை எனது வலையில் லிங் கொடுப்பது) அனுமதி வழங்குமாறு வேண்டுகிறேன். தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.
மேலும் ஒற்றுப் பிழையின்றி எழுதுமாறு வேண்டுகிறேன். மரபுக் கவிதை என்று வரவேண்டும். மரபு கவிதை என்று எழுதியமையால் மரபும், கவிதையும் எனப் பொருள் படுவதைப் பார்த்தீர்களா?
88**யாப்பினை மரபு கவிதை இயற்றுவோர் மட்டும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை,புதுக்கவிதை இயற்ற விரும்புவோரும் அறிந்து கொள்வது நலம்.**88
வரவேற்க வேண்டிய சரியான கருத்து.
அகரம் அமுதா ஐயா!
மரபு கவிதை என்பது சரியே.
கருத்துரையிடுக