செவ்வாய், 2 டிசம்பர், 2008

கவிதை பற்றி அ.கி.பரந்தாமன்

கவிதை பற்றி கவிஞர் அ.கி.பரந்தாமன்
உள்ளத்தைத் தொடுவது கவிதை-உள்மன
உணர்வினைக் கவர்வது கவிதை
பள்ளத்தை இதுவெனக் காட்டி-நல்ல
பாதையில் விடுப்பது கவிதை

கருத்தோடு மிளிர்வது கவிதை-உயர்
கற்பனை உள்ளது கவிதை
விருப்புடன் கற்பது கவிதை -பலருக்கும்
விளங்கிட இருப்பது கவிதை

செஞ்சொல்லால் அமைவது கவிதை-ஓசைச்
சிறப்புக்கும் உரியது கவிதை
எஞ்சலில் இன்பத்தை ஈந்து-செய்யுள்
இலக்கணம் கொண்டது கவிதை
வெற்றுச் சொல் அடுக்குகள் இன்றி-அரிய
விருந்தினை அளிப்பது கவிதை
கற்பார் தம் நெஞ்சில் வற்றா-ஊற்றாய்
கலைக்கிட மாவது கவிதை.
அ.கி.பரந்தாமன் அவர்கள் கூறும் உயர்ந்த கவிதைகளைப் படைக்க தேவை யாப்பு.அதனைக் கற்போம் வாருங்கள்.

திங்கள், 1 டிசம்பர், 2008

யாப்பின் தோற்றம்

கவிதை மொழி தோன்றிய காலத்தை நம்மால் அறுதியிட முடியாது.மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் வாழ்வில் இரண்டறப் பின்னிப் பிணைந்து கிடப்பது கவிதை மொழியாகிய பாட்டு.தாலாட்டாகட்டும்,தொழிற்பாட்டுகளாகட்டும்,ஒப்பாரி பாடல்களாகட்டும் எல்லா பாடல்களுமே ஒரு வித ஓசை நயமும்,இசை ஓழுங்கும்,தாளக்கட்டும்,சுருதிலயமும்,சங்கித உயிர்ப்பும் இருப்பதைக் காணலாம்.இவ்வகை ஒழுங்கை தான் இலக்கண நூலார் யாப்பு என்ற கலைச்சொல்லாகக் கூறிக்கின்றனர்.உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது யாப்பு.யாப்பினை மரபு கவிதை இயற்றுவோர் மட்டும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை,புதுக்கவிதை இயற்ற விரும்புவோரும் அறிந்து கொள்வது நலம்.-------தொடரும்

ஞாயிறு, 30 நவம்பர், 2008

vanakkam