செவ்வாய், 2 டிசம்பர், 2008

கவிதை பற்றி அ.கி.பரந்தாமன்

கவிதை பற்றி கவிஞர் அ.கி.பரந்தாமன்
உள்ளத்தைத் தொடுவது கவிதை-உள்மன
உணர்வினைக் கவர்வது கவிதை
பள்ளத்தை இதுவெனக் காட்டி-நல்ல
பாதையில் விடுப்பது கவிதை

கருத்தோடு மிளிர்வது கவிதை-உயர்
கற்பனை உள்ளது கவிதை
விருப்புடன் கற்பது கவிதை -பலருக்கும்
விளங்கிட இருப்பது கவிதை

செஞ்சொல்லால் அமைவது கவிதை-ஓசைச்
சிறப்புக்கும் உரியது கவிதை
எஞ்சலில் இன்பத்தை ஈந்து-செய்யுள்
இலக்கணம் கொண்டது கவிதை
வெற்றுச் சொல் அடுக்குகள் இன்றி-அரிய
விருந்தினை அளிப்பது கவிதை
கற்பார் தம் நெஞ்சில் வற்றா-ஊற்றாய்
கலைக்கிட மாவது கவிதை.
அ.கி.பரந்தாமன் அவர்கள் கூறும் உயர்ந்த கவிதைகளைப் படைக்க தேவை யாப்பு.அதனைக் கற்போம் வாருங்கள்.

1 கருத்து:

மேவி... சொன்னது…

nalla padivu....
write more....